முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சவரக்கத்தி

அ ப்பா, வழக்கமாக க் கடை திறக்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே நான் கடையை த் திறந்திருந்தேன். அப்பா, எப்பொழுது கடையைத் திறந்தாலும் முதல் வேலையாக கண்ணாடியை எடுத்து வெளிச்சுவற்றில் மாட்டிவிட்டுதான் மற்ற வேலையைத் தொடங்குவார். சவரக்கடையின் கதாநாயகி, கண்ணாடிதான். எந்த முகத்தையும் அழகாகக் காட்டுவிடும் கண்ணாடி வைத்திருக்கும் சவரக் கடைக்காரர்கள் பிழைத்துக்கொள்ளவே செய்கிறார்கள். அப்படியான கண்ணாடிதான் அப்பா கடையிலும் இருந்தது. அதை எடுத்து வெளியில் மாட்டியவனாய் என் முகத்தை ஒரு முறை பார்த்துவிட்டு சீப்பு பற்களுக்கிடையிலிருந்த அழுக்குகளை ஒரு குச்சியால் நெம்பி எடுத்துக்கொண்டிருந்தேன்.   அப்பா கடைக்குளில் இருக்கையில் அவ்வளவு எளிதில் என்னைக் கடைக்குள் அனுமதிக்க மாட்டார். ஒரு ஸ்டூலை எடுத்து வெளியில் கிடத்தி என்னை அதில் உட்காரச் சொல்லி செய்தித்தாளைக் கொடுத்து வாசிக்கச் சொல்வார். அவர் செய்யும் வேலையை நான் கவனித்துவிடக் கூடாது என்பதற்காக அப்பா செய்யும் தந்திரம் அது. நான் பேப்பர் படிப்பதைப் போல கடைக்கண்ணால் அப்பாவின் தொழிலைக் கவனித்திருக்கிறேன். முகச்சவரம் செய்துகொள்ள வந்திருப்பவர், நாற்காலிய...

பசலி

வரலாற்றுப்புனைவு ஒ ட்டப்பிடாரம் தாலுகா ஆபிஸ் நடக்கயிருக்கின்ற ஜமாபந்தியால் களைக்கட்டியிருந்தது. அவ்வூரை தாலுகா கிராமமாக அறிவித்ததன் பிறகு கூடும் முதல் ஜமாபந்தி என்பதால் பந்தல்கால் ஊன்றுதல் தொடங்கி தண்ணீர் பந்தல் அமைக்கிறது வரைக்கும் வேலைகள் மும்முரமாக நடந்தேறின. அவ்வூருக்குப் புதிதாக நியமிக்கப்பட்டிருந்த தாசில்தார் பஞ்சமன் அத்தனை வேலைகளையும், தனி ஒருவராக வரிந்துகட்டி செய்துகொண்டிருந்தார். அதிகாரிகள் மனு வாங்குவதற்கும் மக்கள் உட்கார்ந்து இளைப்பாறுவதற்கும் உகந்ததாக பெரிய பந்தல் போடப்பட்டு , அதில் வைக்கோல் நிரவி தண்ணீர் தெளித்து அதன் மீது பின்னிய பனைமட்டைகள் விரிக்கப்பட்டிருந்தன. பஞ்சமன் திட்டமிடலின் பேரில் ஜமாபந்தி நடப்பதால் பொது மக்கள் வருமிடங்களிலும் நடைபாதையிலும், அவர்கள் இளைப்பாறுவதற்குக் கூடுமிடங்களிலும் பெரிய மண்சால்களில் தண்ணீர் வைத்தார். ஜமாபந்தியில் எத்தகைய மனுக்கள் வாங்கப்படும் என்கிற செய்தியைப் பட்டித் தொட்டியெங்கும் தண்டோரா போட்டு அறிவிக்கச் செய்தார். ஒரு நாளைக்கு நான்கு ஊரென ஒரு வாரகாலம் நடைபெறும்   ஜமாபந்தி அது. தாசில்தாரரின் அறிவித்தலின் பேரில் ஊர் தலையாரிகள் ...

தந்த்திணாண் தந்த்திணாண் தந்தத் தந்த்திணாண்’

                  பெரமனின் வேட்டியைப் பிடித்து இழுத்தான் சுகன். நாலு முழ வேட்டி. நான்கைந்து இடத்தில் கிழிந்து உருட்டித் திரட்டி தைத்த வேட்டி. இன்னும் கொஞ்சம் விசையாக இழுத்தால் கிழிந்து இடத்தில திரும்பவும் கிழியும். தைத்த   மூட்டில் மூட்டு   விலகும். கைகளைக் கொஞ்சம் நிறுத்தி, தலையைக் கொஞ்சம் பணிந்து பேரனைப் பார்த்து‘ என்னடா, கர்க்கண்டு...?’ என்றார். பேரனை அவர் பெரும்பாலும் விளிப்பது அப்படிதான். கர்க்கண்டு, சக்கர, ஐயரு,..இப்படி.       பேரனின் கண்கள் தாத்தாவிடமிருந்து விலகி கோவிலுக்குள் நிலைக்குத்தி நின்றது. ‘அங்கப் பாரு தத்தா,...’       பெரமன் பேரன் காட்டியத் திசையைப் பார்த்தார். அய்யனார் கோவிலின் கோபுரம், கொடி, மரம். பூ, பத்தி, சூடம், ஐயர் ஐயங்கார்கள், குடை, சிலை, ஆண்கள், பெண்கள், வரிசை, கூட்டம், நிறை, நிரல்....       ‘ அவங்களப் பாரு தத்தா...’ காட்டியத் திசையையே திரும்பவும் காட்டியது அவனது ஆட்காட்டி விரல். பெர...