முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அதுதான் இது

‘அதுதான்க இது...’ செந்தில்நாதன் சொன்னதும் பஞ்சாயத்தாரர்களுக்கு கண், மண் தெரியாத கோபம் நாசியில் வெடித்தது. பின்னே, எத்தனை முறை, எத்தனை சுற்றுக்கேள்விகள். கடைசியில் அதுதான்க இது என்கிற ஒன்றை மட்டுமே பதிலாகச் சொன்னால் எப்படி. இம்...? அவனைச் சூழ்ந்து நின்றவர்கள் அவனை அடித்து, கும்மி, பிழிந்து காயப் போடாத குறையாக ஆத்திரம் பொங்க நின்றுகொண்டிருந்தார்கள். செந்தில்நாதன், ஒரு பதட்டமுமில்லாமல் ஆசுவாசமாக நின்றுகொண்டிருந்தான். ஒவ்வொரு விரலையும் விரல்களுக்கிடையில் கொடுத்து, நெட்டிப் பறித்தவாறு கவுண்டமணியாரை பார்த்தான். பலருக்கு, அவனை அடித்து மூக்கு முகறையெல்லாம் பிய்க்க வேண்டும் போலிருந்தது. கவுண்டமணியார் விரல் நீட்டி அவனை அருகினில் அழைத்தார். அவரது அழைப்பில் மிரட்டலும், எப்படியேனும் உண்மையைக் கறந்துவிட வேண்டும் என்கிற தொனிப்பும் நா, கண்கள், உதடுகளின் வழியே துருத்திக்கொண்டிருந்தன. கவுண்டமணியார், ஊரின் பெருந்தலை. நாட்டாமைக்காரர். பெரிய மீசை வைத்த நிலக்கிழார். புலியின் மீசையையொத்த மீசையை புறங்கையால் நீவி விட்டபடி எச்சிலை எச்சில் கோப்பையில் ‘ பொளிச்..’ எனத் துப்பினார். பிறகு இடுப்பில் தொங்க...

தடுக்கை

து ச்சலைக்கு வந்திருந்த அதே சந்தேகம்தான் பீமனுக்கும் வந்திருந்தது. சித்தப்பா மக்கள், பெரியப்பா மக்கள் ஒத்த காந்த துருவங்களாக ஒருவரையொருவர் விலக்கி நின்றாலும் இருவருக்குள்ளும் எழுந்திருந்த சந்தேகம் ஒன்றாகவே இருந்தது. துச்சலை வாய்த்துடுக்கானவள். தேளின் கொடுக்கைப்போல வாய்க்குள் எப்பொழுதும் கேள்விகள் துருத்திக்கொண்டிருக்கும். ஒரு செல்லத்திற்கே குடுமி எப்படியெல்லாமோ ஆடும். இவள் நூறு செல்லத்தவள். போதாக்குறைக்கு தாய், தந்தை செல்லம் வேறு. சொல்லவா வேணும்...?        அஸ்தினாபுரம் அரண்மனை முற்றத்தில் தொங்கிக்கிடந்த ஊஞ்சலில் சாவகாசமாக உட்கார்ந்துகொண்டு, இரு கைகளையும் சங்கிலித் தொடர்களுக்கிடையில் பின்னிக்கிடந்த முல்லை கொடியைப் பிடித்துக்கொண்டு கால்களை நேராக நீட்டி வழியில் போகிறவர்கள், வருகிறவர்களை அழைத்து கேள்வி கேட்டுகிறவள். அவளது கேள்விக்குப் பதில் சொல்வதற்கென்றே அரண்மனையில் கொஞ்சப் பேரை வேலைக்குப் பணித்திருந்தான் துரியோதனன். கேள்வி, கேள்வி மேல் கேள்வி கேட்கிறவளல்ல துச்சலை. கேள்விக்குள் கேள்வியென நுழைக்கிறவள். அன்றைய தினம் கேள்வியை   வழிப் போக்கர்களிடமோ, அரண்ம...