முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நான் எழுதிய கதைகளில் மிகச் சிறிய கதை இது.

தன் விருப்பத்தை மீறி  ஒரு தேவதையை  சாத்தானுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். ஐந்து வருடங்கள் கழிந்ததும் தேவதை சொன்னது, ' சாத்தானின்றி ஒரு நொடி கூட என்னால் உயிர் வாழ முடியாது'.                           - 23.05.2019

வாஸ்து

சண்முகத்தின் முகம் சோப்பும் நுரையுமாக இருந்த தால் அவரை அழைத்தவரின் முகம் சரியாகத் தெரிந்திருக்கவில்லை . அழைப்பு மாடியிலிருந்து வந்திருந்ததால் அழைத்தவர் மாடிக்கு புதிதாக குடிவந்தவராக இருக்கலாம் என யூகித்தார்.        கண்களிலிருந்த சோப்பு நுரையை இரண்டு ஆட்காட்டி விரல்களால் வழித்து கட்டை விரலுக்கு கொடுத்து நுரையை உதறினார் சண்முகம் . நுரை நாலாபுறமும் தெறித்தது . கண்களை அகல விரித்துப் பார்த்தார் . அவர் யூகித்ததைப் போவே மாடிக்கு புதிதாக குடிவந்தவர் மாடியில் நின்றுகொண்டிருந்தார் .        ‘ சண்முகம்,’        பெயரை விளிக்கையில் வார்த்தையிலிருந்த தடிப்பு ‘ கொஞ்சம் மேலே...’ என்கையில் தொனிப்பு குன்றியிருந்தது. பாதி வார்த்தைகளை அவள்   விழுங்கியிருந்தார். அவர் சொல்லாது விட்டிருந்த மிச்ச ச்சொச்ச சொற்கள் அவரது ஆட்காட்டி விரல் அசைப்பு சொல்லி முடித்திருந்தது . வரவேணும் , வரமுடியுமா , வந்திட்டுப்போ ,.. இவற்றில் ஏதேனும் ஒன்றைத்தான் அவர் சொல்ல நினைத்திருக்க வேணும். அதைத்தான் அவர் விரலால் சொல்லி முடித்...

எண் வலிச் சாலை ( வரலாற்றுப் புனைவு )

சு த்தம்! சுத்தம்!               மாமன்னர் மார்த்தாண்ட வர்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குப்பிறகு அரண்மனை வளாகம், மாமணி மண்டபம், கோட்டை, கொத்தளம் வாயில்கள்,.. யாவும் கூட்டிப் பெருக்கி ஒரு தூசியோ துரும்போ அல்லாமல் துடைத்தெடுத்த சுத்தத்தில் இருந்தது. இதைவிடவும் படுசுத்தமாக இருந்தது சமஸ்தானத்தின் கஜானாதான்!        கிடங்கிலிருக்கும் தானிய இருப்பைக் கூட்டி அள்ளினால் பதக்குத் தேறாது. ஒரு வார காலம் கொண்டாடு, கொண்டாடெனக் கொண்டாடித் தீர்த்த மன்னரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கொடுக்க, வழங்க, அள்ளி இறைத்ததில் கஜானா சுத்தம்! படுசுத்தம்!        கஜானாவை மீண்டும் நிரப்ப வேண்டிய பொறுப்பு சமஸ்தானத்தின் திவான் டி.ஆர். பார்த்தசாரதி அய்யங்கார் தலையில் வந்து விழுந்திருந்தது. திவான், மார்பின் குறுக்கே ஓடிக்கிடந்த பூணூலை விரல்களால் நீவி விட்டுக்கொண்டு, குடுமியை அள்ளி முடிந்துகொண்டு கஜானா குறித்தும் அதை எப்படி நிரப்பலாமென்றும் சிந்திக்கலானார். ஒன்றைக் குறித்து   பலவாறு ...