முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மூன்றுசகோதரிகளின் கதை

மொழிபெயர்ப்பு  சிறுகதை ஆங்கிலத்தில் . தபிஷ் ஹைர் (டென்மார்க்) தமிழில் - அண்டனூர் சுரா. மூ ன்று சகோதரிகள் பற்றியக் கதை இது. கதையிலிருக்கும் மூவரில் ஒருவரை எனக்கு நன்கு தெரியும், எழுபது வயதைக் கடந்திருக்கிற வயோதிக பெண்மணி அவர். இந்தியாவில் ஒரு சின்னஞ்சிறிய நகரத்தில் தனித்து வசிக்கக்கூடியவர். இளவயதில் விதவையான, குழந்தைப் பாக்கியமில்லாத, கூட இருந்து கவனித்துக் கொள்ள யாருமில்லாத தனி மரம் அவர்.        அவருக்கு இரு சகோதரிகள், இருவருமே அவருக்கு மூத்தவர்கள். இவருக்கே வயது எழுபதைத் தாண்டிவிட்டது, அப்படியென்றால் அவர்களுக்கு...? இவருக்கு நேர் மூத்தவர், இவர் வசிக்கும் அதே இந்தியாவில்தான் வசித்து வருகிறார். இவரை விடவும் சற்றே பெரிய நகரத்தில் மகன், மறுமகள் ,பேரக் குழந்தைகளுடன் வசித்து வரக்கூடியவர். மகன் மத்திய அரசு துறையின் கீழ் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் நிரந்தர ஊழியராக பணியாற்றி வருகிறவர்.        இவருடைய மூத்த சகோதரி பாகிஸ்தானில் வசித்து வருகிறார். திருமணம் நடந்தேறியதும் கணவருடன் பாகிஸ்தானிற்குச் சென்று வி...

உத்தம சீலர்

சாந்தினி , முகநூல் பக்கத்தில் பாலியல் ரீதியாக தொல்லைக் கொடுத்தவர்களின் பெயர்களைப் பதிவிடப்போகிறார் என்கிற செய்தியை அமலா வாயிலாக கறந்திருந்தான் சுதாகரன். அந்த ரகசிய செய்தியை அறிந்ததிலிருந்தே அவனது அன்றாட இத்யாதிகளின் நடவடிக்கையில் பெருந்துண்டு விழுந்திருந்தது.        சில்மி ஸ ங்கள் சந்திக்கு வந்தால் என்னாகுமென்று அவனொன்றும் அறியாதவனில்லை. நாய்,புதைப்பிணத்தைத் தோண்டி சந்திக்கு இழுத்து வந்து கடித்துக் குதறும் பாடுதான் என்பதை அவன் அறிந்து வைத்திருந்தான் . சும்மாவே ஊருக்கு ஆயிரம் வாய் . சுற்றும் இணைய வெளிக்கு சொல்லவா வேணும் .  இப்போதெல்லாம் யாரும் யாரையும் தன் கண்கொண்டு பார்ப்பதில்லை. எல்லாவற்றிருக்கும் கேமரா கண்தான் . செல்பி எடுக்க ஒரு ஒரு கண். , பறவைப் பட்சிகள் பறந்தால் இருபது கண், விபத்து என்றாலும் மேலும் சில கண்.   நடிகர், நடிகைகள் வந்தால் ஆயிரம் கண். இப்படியாக கேமரா கண்களை விரிக்க ; கெட்டத் தொடுதலுக்கும், பலாத்கார முயற்சிக்கும் சொல்லவா வேணும்...?.           ...