முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மொசக் குட்டி

ச டையன் எப்பொழுது   கொல்லைக்காட்டிற்குச் சென்றாலும் திரும்பி வருகையில் ஏதேனும் ஒன்றை இழுத்து வரவே செய்வார். நரி, கொக்கு, பாம்பு,.. இப்படி ஏதேனும் ஒன்று அவரது கையில் செத்து காலும், வாலும் தரையில் இழுபட்டுக்கொண்டு வரும். சில நேரம் அவர் ஏதேனும் ஒன்றை உயிருடன் பிடித்து வருவதும் உண்டு. ‘வவ்...வவ்...’ தெரு நாய்கள் அவரைக்கண்டு ஆலவட்டமடிக்கும். தொண்டைத் தண்ணீர் வற்றக் குரைக்கும். நாய்கள் ஊரையே கூட்டுவதைப் போல குரைத்துக்கொண்டிருந்தால் சடையன் வீடு திரும்புகிறார் என்று அர்த்தம். அவரது பேரன் அருணும் பேத்தி வினுவும் வாசல் வரைக்குமாக ஓடி வந்து எட்டிப் பார்ப்பார்கள். ஒரு நாள் அவர் ஒரு நரியை உயிருடன் பிடித்து கழுத்தை கால்களுடன் சேர்த்து இறுகக் கட்டி தூக்கிக்கொண்டு வந்திருந்தார். ஊரும், தெருவும் வீடு வரைக்கும் வந்து நெற்றி சுருங்கப் பார்த்துச் சென்றது. இன்னொரு நாள், ஆளுயர சாரைப் பாம்பை அடித்து வால்பகுதியைப் பீச்சாங்கையால் பிடித்து இழுத்துகொண்டு வந்தார். தெருவே நாலாபுறமும் தெறித்து ஓடியது. இப்படியாக சடையன் பிடித்து வரும் பறவைப்பட்சிகள் ஊரைத் திரட்டவும், சில நேரம் விரட்டவும் செய்யும். அவரது கைக்க...